நட்பு, காதல், செண்டிமெண்ட், துரோகம், வஞ்சகம் எல்லாம் கலந்த சசிகுமாரின் அதே கதை தான் வெற்றிவேல் . இதை தாண்டியும் போயிடக்கூடாது, இதுல எதையும் மிஸ்ஸும் பண்ணிடக்கூடாது என்பதில் மிக கவனமாக கையாண்டிருக்கிறார்கள். ஒருவேளை பிரம்மனும் தாரை தப்பட்டையும் தந்த வலி தான் சசியை இப்படி யோசிக்க வைத்திருக்கும் போல…
வழக்கம்போல படத்தை சசி தான் தாங்கி பிடிக்கிறார். ஓப்பனிங் ஸாங் முதல் எண்ட் ஃபைட் வரை அதே டிட்டோ… ஆனால் ஸ்க்ரீனில் ஃப்ரெஷாக தெரிவது எப்படி என்பதை சசியிடம் பாடம் கற்க வேண்டும். மூன்று ஹீரோயின்கள் உட்பட அத்தனை காஸ்டிங்கிலும் சசி மட்டும் தனியாக தெரிவது ரசிக்க வைக்கிறது. ஆனால் காதலிக்கும் காட்சிகள் தான் நெருடுகின்றன. அதிலும் வெட்கப்படுறதை எப்ப நிறுத்துவீங்க சசி?
சசிகுமார் மனைவியாக வரும் ரேணுகாவுக்கு நடிக்க நல்ல ஸ்கோப் உள்ள கேரக்டர். ஒரு ரவுண்ட் வருவார். தம்பி காதலியாக வரும் பார்வையிலேயே நம்மை கவர்கிறார்.
சசியை காதலித்து ஏமாறும் அனன்யா பாத்திரத்தில் மியா ஜார்ஜ், சசி உதவ வேண்டிய காதலிக்கும் நண்பனான இனிகோவுக்கு பதிலாக தம்பியாக ஆனந்த் நாக், தன் முறைப்பெண்ணை தூக்கியதால் வஞ்சம் வைத்து வேலை செய்யும் விஜய் சேதுபதிக்கு பதில் ராஜேஷ் என சவுந்தரபாண்டிய நாடோடிகள் பாத்திரங்கள். அவரவர்களுக்கான தேவையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். பிரபுவும் இளவரசுவும் செண்டிமெண்ட்டை குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள்.
தன் படத்துக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகம் என தெரிந்தும் தம்பி ராமய்யாவை வைத்து இத்தனை டபுள் மீனிங் தேவையா?
பாடல்கள் இசை ஒளிப்பதிவு மூன்றுமே ஒரு நல்ல கமர்ஷியல் படத்துக்கான தேவையானதை கொடுத்திருக்கிறது.
அக்மார்க் சசி படம்…. வழக்கம்போல பி சி செண்டர் ரசிகர்களை குஷிப்படுத்துவான் இந்த வெற்றிவேல். ஆனால் ரூட்டை மாத்துங்க சசி… போரடிக்குது!

வெற்றிவேல் cocktail rating: (2.7/5)
No comments:
Post a Comment