காதலில் சொதப்புவது எப்படி, வாய்மூடி பேசவும் படங்களைத் தொடர்ந்து பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் மாரி. ரவுடி வேடத்தில் தனுஷ் நடித்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் வில்லனாக நடித்தார். அந்த படம் எதிர்பார்த்த படி வெற்றி பெறவில்லை என்றபோதும், தனுஷின் ரசிகர்களுக்கும், தனுசுக்கும் மனதளவில் திருப்தியை கொடுத்த படமாகவே அமைந்தது. அதன்காரணமாக அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக அப்படம் வெளியான நேரத்திலேயே கூறி வந்தார் தனுஷ்.
மேலும், அதையடுத்து தங்கமகன், கொடி, தொடரி படங்களில் நடித்த தனுஷ், தற்போது என்னை நோக்கி பாயும் தோட்டாவில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தனுசுக்கு மாரி-2 படத்தின் கதையை தற்போது பக்காவாக ரெடி பண்ணி விட்டாராம் பாலாஜி மோகன். அதனால் விரைவில் அந்த படத்திலும் நடிக்கப் போகிறாராம் தனுஷ். அதோடு, அந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிப்பதற்காக தமன்னா, சமந்தா உள்ளிட்ட சில முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடக்கிறதாம்.
No comments:
Post a Comment