Wednesday, 20 April 2016

இந்தோனேஷியா நாட்டில் ‘கபாலி’ படைத்த பிரம்மாண்ட சாதனை! 300 திரையரங்குகளில் ரிலீஸ்..

சூப்பர்ஸ்டார் நடித்த ‘கபாலி’ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இந்த படம் தேர்தல் முடிந்தவுடன் மே இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் ரிலீஸ் ஆகும் என்றும் ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

இந்நிலையில் ‘தெறி’ படத்தின் மூலம் திருப்திகரமான லாபத்தை பெற்ற கலைப்புலி எஸ்.தாணு தற்போது ‘கபாலி’ படத்தின் வியாபாரத்தை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் ‘கபாலி திரைப்படம் இந்தோனேஷியா நாட்டில்
செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதற்கு முன்னர் எந்த ஒரு இந்திய திரைப்படமும் இந்தோனேஷியாவில் இவ்வளவு அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment