சமயங்களில் பில்கேட்ஸ் கணக்கையே பீஸ் பீஸ் ஆக்கிவிடும் போலிருக்கிறது வடிவேலுவின் கணக்கு. தமிழ்சினிமாவில் ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் என்ற கணக்கை முதன் முதலில் துவங்கிய முரட்டு சிங்கமே அவர்தான். அதற்கப்புறம்தான் சந்தானம் துவங்கி, நேற்று வந்த யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் வரைக்கும் தினப்படியாக ஒரே ஒரு ரேட் கொடுங்க என்று பிடுங்க ஆரம்பித்தார்கள். சரி… அதிருக்கட்டும். சமயங்களில் ஆடு வெட்ற கத்தியாக இருந்தாலும், அதற்கும் சில பல கொள்கைகள் இருக்கும்தானே?
அப்படிதான் இருவேறு படங்களுக்கு ஒரே நேரத்தில் சம்பளம் பேசி அதிர வைத்திருக்கிறார் வடிவேலு. எப்படி?
இம்சை அரசன் 23 ம் புலிகேசி படத்தின் பார்ட் 2 எடுக்கப் போகிறார் சிம்புதேவன். (காதை கிட்ட கொடுங்க. ஒரு ரகசியம். புலி படக்கதையை இவர் வடிவேலுவுக்கு சொல்லிதான் ஓ.கே பண்ணி வைத்திருந்தாராம். அதற்கப்புறம் தேவையில்லாமல் தலையை கொடுத்தவர்தான் விஜய்) இதை ஷங்கர் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து லைகா நிறுவனத்திற்கு கொடுத்துவிடுவதாக ஏற்பாடு. இதில் நடிக்கதான் ஐந்து கோடி சம்பளம் கேட்டு, அதில் ஒரு பைசா குறைய மாட்டேன் என்று கூறியிருக்கிறாராம் வடிவேலு.
அதே நேரத்தில் இன்னொரு அதிசயம். சுராஜ் இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கும் கத்திசண்டை படத்திற்கு 90 லட்சம் சம்பளம் கேட்டாராம் வடிவேலு. அதற்கப்புறம் விஷால் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, முப்பது லட்சத்தை குறைத்துக் கொண்டு 60 லட்சத்திற்கு ஓ.கே சொல்லியிருக்கிறார்.
வடிவேலுவின் இந்த அட்ஜஸ்ட்மென்ட், நட்புக்காகதான் என்பது தெளிவாக தெரிகிறதல்லவா? இருந்தாலும் மனுஷன் நல்லவருய்யா…. என்று சந்தோஷம் கொள்கிறது சமஸ்தானம்!
No comments:
Post a Comment