Wednesday, 20 April 2016

நடிகர் சங்கத்தில் இருந்து விலகினார் சிம்பு!


            தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார் நடிகர் சிம்பு. சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சிம்பு, தோல்வியைத் தழுவினார். அத்துடன், சமீபத்தில் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட்டிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. இந்தநிலையில், எந்தப் பிரச்னையிலும் தனக்கு நடிகர் சங்கம் உதவி செய்யவில்லை என்று கூறி, நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். அத்துடன், நிறைய நடிகர்கள் ஜோக்கர்களாகத் தெரிகிறார்கள் எனவும் அவர் கமெண்ட் அடித்துள்ளார்.

No comments:

Post a Comment