கலைப்புலி தாணுவின் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படம் தமிழ்புத்தாண்டு அன்று திரைக்கு வந்தது.
இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
வசூலையும் வாரி குவித்து வருகிறது.
விஜய் படங்கள் வெளியாகும்போது அஜித் ரசிகர்கள் கழுவி ஊற்றுவது வழக்கம்தான்.
தெறி படத்துக்கு ஒருபடிமேலேபோய் தெறி படம் தோல்வி என்றும், தியேட்டர்கள் காலியாக கிடப்பதுபோலவும் பொய்யான செய்திகளை தொடர்ந்து பரப்பினர்.
அதுமட்டுமல்ல, தெறி படத்தின் மதுரை ஏரியாவை வாங்கிய இயக்குநர் அமீர் பெயரில் போலியான ட்விட்டர் கணக்கு தொடங்கி, மதுரையில் தெறி படத்தை ரிலீஸ் செய்தவகையில் 50 சதவீதம் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனால் தயாரிப்பாளர் தாணுவுக்கு எதிராக போராட்டம் நடத்த இருப்பதாகவும் இயக்குநர் அமீர் சொல்வது போல் ஒரு தகவலையும் பரப்பினர்.
அது போலி கணக்கு என்றும், என்னுடைய பெயரில் இருக்கும் முகநூல் பக்கமோ, ட்விட்டர் பக்கமோ என்னுடையது இல்லை. யாரோ சிலர் தவறான எண்ணம் கொண்டவர்களால் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் தெரிவித்து கொள்கிறேன் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார் அமீர்.
No comments:
Post a Comment